வீசிய தென்றல்
பாதியில் நின்றது
பேசிய வசந்தம்
சோதியில் கலந்தது
நேசித்த உறவுகள்
யோசித்து அழுதன
வாசித்த உள்ளங்கள்
யாசித்து தொழுதன
பச்சை மண் ஒன்று
மண்ணுக்கு உரமானது
அச்சம் அறியாக் கன்று
கண்ணை விட்டுப் போனது
பாட்டோ பாட்டென்று
அவனுள்ளம் துடித்தது
ஓட்டோ பட்டென்று
ஏன் உயிரைக் குடித்தது
அன்றொரு ஜோன்சன்
நடுத்தெருவில்
குண்டடிபட்டு இறந்தான்
இன்றொரு ஜோன்சன் மகன்
நடுத்தெருவில்
மண்டையடிபட்டு மறைந்தான்
அன்பான அம்மா
துன்பத்தில் கதற
அருமைத் தந்தை
துயரத்தில் பதற
ஆசை அண்ணா
சோகத்தல் வீழ
சொந்தம் சிந்தை
நொந்து வாழ
மைந்தா விரைந்து
எங்கே பறந்தாய்?
பைந்தமிழ் உறவை
ஏனோ மறந்தாய்
கண்மணி விதுஷன்
மீண்டும் வருவாயா
கண்ணீரைத் துடைத்து
தீண்டக் கரம் தருவாயா?
கொலன்ட் (The Netherlands)